தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மற்றும் மத்திய திறனுக்க செயலகம் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான மின் சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வரா மகாலில் நடந்த இந்த முகாமில் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு மற்றும் மின் திறன் விழிப்புணர்வு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து விவசாயிகள் குத்து விளக்கேற்றினர். தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை வகித்தார் .

விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மின் பாதுகாப்பு மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி குறித்து செய்துங்கநல்லூர் உதவி மின் பொறியாளர் சுரேஷ்குமார் பேசினார். விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆற்றும் பணிகள் மற்றும் மானியங்கள் குறித்து செய்துங்கநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் பேசினார். தோட்டக்கலை சாகுபடியில் துல்லியமான சாகுபடி ஈட்டுவது குறித்து கருங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தனும் பேசினார்.
தூத்துக்குடி ஊரக கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வரவேற்றார். தூத்துக்குடி உதவிபொறியாளர் பெருமாள் தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் ராம்குமார், தூத்துக்குடி மத்திய அலுவலக உதவி செயற்பொறியாளர்கள் வேலாயுதம், ஆறுமுகம் , அப்துல்லா, திருவைகுண்டம் உபகோட்ட உதவிபொறியாளர்கள் ஏரல் ராஜேந்திரன், திருவைகுண்டம் முரசொலி மாறன், திருவைகுண்டம் ஊரகம் சங்கீதா மற்றும் உபகோட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் செய்துங்கநல்லூர், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உட்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி செயற்பொறியாளர் பொது ரெமோனா நன்றி கூறினார்.


