திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையின் தற்போதைய நிலை குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் தற்போது நடந்து வரும் அகழாய்வு பணிகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத்தலைவரும் (பொறுப்பு), உயிர் தொழில்நுட்பத்துறை பேராசிரியருமான சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். உதவி பேராசிரியர் முருகன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.
லக்னோ பீர்பால் சானி தொல்பொருள் அறிவியல் நிலையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் முனைவர் அஞ்சலி ட்ரைவேதி தொல்பொருட்களில் மகரந்த பொருட்களை எப்படி கண்டறிவது. இந்த மகரந்த பொருட்களிலிருந்து விவசாயம் செய்த மற்றும் காடுகளில் தானாக வளர்ந்த தாவரங்களை எப்படி கண்டறிவது. கண்டறிந்த பொருட்களின் வயதை எப்படி கண்டறிவது என்பது குறித்து பேசினார்.
லக்னோ பீர்பால் சானி தொல்பொருள் அறிவியல் நிலையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் முனைவர் மோத்தேகாய் தொல்பொருள் களத்தில் கண்டுடெடுத்த செங்கல் மற்றும் பானை ஓடுகளின் வயதைக் கண்டறிதல் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
இறுதியில் முதலாமாண்டு மாணவி மீனா நன்றி கூறினார்.


