புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அருட்திரு.அகஸ்டின் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் ஃபுளோரன்ஸ், வட்ட செயலாளர் டென்சிங்,மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர், தலைமை ஆசிரியர் அருட்திரு. அமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


