தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேவர் பிளாக் மற்றும் ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தில் நடைபெற்று வருகின்ற சிமெண்ட் தளம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் பொதுமக்கள் அதுவரை ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.


