இந்த 70 வயது இளைஞரின் பெயர் சங்கரன்பிள்ளை.-
உழைப்பை மட்டுமே மூலதனமாய் கொண்டு செயல்படுகிறார். திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜநகர் நுழைவு பாதையில் இவருடைய ஸ்ரீ முத்துலெட்சுமி மெஸ் என்ற பெயரில் 44 வருடங்களாக சைவ உணவகம் நடத்தி வருகிறார். இன்று காலை உணவருந்த சென்றேன். கனிவான கன்னித்தமிழில் சார், இட்லி, பூரி என்ன வேண்டும். இட்லி, அடுத்த கனம் சுடச்சுட இட்லி இலையில், சாம்பார், சட்னி, உளுந்து வடை. இட்லியை புட்டு வாயில் வைத்தவுடன் தொண்டை யில் நழுவி வயிற்றின் உள்ள விழுந்து விடுகிறது. அப்படியொரு மென்மை. மல்லிகைப்பூ இட்லி இதுதான். சாம்பார் மிக அருமை சிறு குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை நம்பிக்கையாக சாப்பிடலாம் இவரது உணவகத்தில்.

மனைவி மணிமேகலை அம்மாவும், சங்கரன் பிள்ளையும் சேர்ந்தே உழைக்கிறார்கள். இந்த நவீன காலத்திலும், விறகு அடுப்பில் தான் இட்லி தயார் செய்கிறார்கள்.
70 வயதிலும் இவர்களின் உழைப்பிற்கு நவீன உலகில் தரத்திற்கும், ருசிக்கும் முதலிடம் கொடுக்கிறார்கள். ஆடம்பரத்தை தேடி விலை அதிகமாக கொடுத்த தரமில்லாத உணவை உட்கொண்டு உடம்பை கெடுத்துக்கொள்வதை விட இந்த 70 வயது இளைஞர் சங்கரன்பிள்ளை அவர்களின் உழைப்பிற்கு ஆதரவளிப்போம்.

–


