தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணையில் மிகவும் பழமையான சேக் சிந்தா மதார் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் வருடம் தோறும் நவம்பர் மாத இறுதியில் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக மாலை 7 மணி அளவில் சேக் சிந்தா மதார் தர்காவில் சிறப்பு துவா நடந்தது. அதை தொடர்ந்து யானை மீது கந்தூரி விழா கொடி எடுத்து வரப்பட்டது. யானை ஊர்வலம் முன்பு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலம்பம் மற்றும் வாள் விளையாட்டு விளையாடியபடி ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலம் ஆறாம்பண்ணை பள்ளிவாசல் தெரு, அரபாத் நகர் தெற்கு தெரு, மெயின் ரோடு, அன்பு நகர் வழியாக மீண்டும் தர்காவிற்கு வந்து கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சேக் சிந்தாமதார் தர்கா நிர்வாகிகள் மொய்தீன் அப்துல் காதர், ஷேக் அப்துல் காதர், அமீன் அன்சாரி, ஷேக் அப்துல்லா, மஸ்தான், செய்யது ஜாபர் ஆலிம், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


