தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் 368 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு 368 மாணவியருக்கு மிதிவண்டியை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் பள்ளியின் சமையலறையை பார்வையிட்டார். மேலும் மாணவிகளுடன் கலந்துரையாடினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல், பள்ளி செயலாளர் முரளி, இயக்குநர் ப்ரீத்தா முரளி, திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


