தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில், இளைஞரணி செயலரும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினவிழா நடைபெற்றது. செவித்திறன் மாற்றுத்திறனாளி பள்ளி, புனித லூசியா பாா்வையற்றோா் பள்ளி, பாசக் கரங்கள் முதியோா், குழந்தைகள் இல்லம், பிளஸ்ஸிங் முதியோா் இல்லம் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் 15 பேருக்கு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தங்க மோதிரங்களை வழங்கினாா். இந்நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி, துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.


