சுரேஷ் குமார் ரெய்னா (Suresh Kumar Raina (காசுமீரி: سریش کمار رائنا )About this soundஒலிப்பு (உதவி·தகவல்) (பிறப்பு: நவம்பர் 27, 1986) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காசுமீர் பண்டிட்கள் வாழ்ந்திருந்த ரைனாவாரி சிறுநகரைச் சேர்ந்த இந்தியத் துடுப்பாட்டக்காரர்.[1] சூலை 2005 முதல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடி வருகிறார். 2006ஆம் ஆண்டிலேயே தேர்வுத் துடுப்பாட்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரது முதல் தேர்வு ஆட்டம் 26 சூலை 2010இல் இலங்கைக்கு எதிராகவே துவங்கியது. உள்நாட்டுப் போட்டிகளில் ரஞ்சிக் கோப்பைக்கு உத்தரப் பிரதேசத் துடுப்பாட்ட அணிக்கும் துலீப் கோப்பைக்கு மத்திய பிராந்தியத்திற்கும் ஆடுகிறார். ஆற்றல்மிகு இடதுகை மட்டையாளரான இவரது களத்தடுப்பிற்கு புகழ்பெற்றவர். அவ்வப்போது புறச் சுழற் பந்து வீசுவதும் உண்டு.இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் குஜராத் லயன்சு அணித தலைவராக இருந்தார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவித் தலைவராகவும் உள்ளார்.[2] இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவராகவும் இருந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு (துடுப்பாட்டம்) ஓட்டங்கள் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.
இவரின் முதல் ஒருநாள் போட்டி இவரின் பத்தொன்பதாவது வயதில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டமும் இலங்கை அணிக்கு எதிரானது தான். இவரின் முதல் போட்டியிலேயே நூறு (துடுப்பாட்டம்) அடித்தார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வெற்றி பெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றிருந்தார்.


