கோவில்பட்டியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் புது ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் தலைமை வகித்தார். நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் முன்னிலை வகித்தார்.அறிவியல் ஆசிரியர் சீனிவாசகன் வரவேற்றார்.தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மாணவர்களுக்கு வானியல் கருத்துக்களை பரப்புவதற்கும், தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவதற்கும் பயிற்சி அளித்தார். இதில் ஆசிரியர்கள் மணிமேகலை, உள்பட மாணவர்கள்,ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


