கோவில்பட்டியில் அவசரகால மருத்துவ தொழில்நுட்ப உதவியாளருக்கான பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சொர்னா கல்வி அறக்கட்டளை சார்பில் சொர்ணா கல்வி நிறுவனத்தில் அவசரகால மருத்துவ தொழில்நுட்ப உதவியாளருக்கான 395 மணி நேரப் பயிற்சியின் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு சொர்ண கல்வி நிறுவனங்களின் தாளாளர்ஜெபின் ஜோஸ் தலைமை வைத்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பயிற்றுனர் பாண்டி செல்வி அனைவரையும் வரவேற்றார். பயிற்சி முதல்வர் சாந்திப்ரியா பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.395 மணிநேர பயிற்சியில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்றுனர் தேவி நன்றி கூறினார்


