தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தில் சாலையோரம் மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் இந்த வழியாக வந்த பொதுமக்கள் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலர் இசக்கி தலைமையிலான தீயணைப்புத்துறையினர் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அந்த மலைப்பாம்பு வல்லநாடு மலைப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.


