இன்று சர்வதேச ஆண்கள் தினம்
நடைவண்டி ஓட்டச்சொல்லிக்கொடுக்கும் போது “அப்பாவாய்”
அதனை விரும்பி ஓட்டிப்பழகும் “மகனாய்”
வீட்டிற்கு மூத்த “அண்ணனாய்”
கடைக்குட்டி செல்லமாய் “தம்பியாய்”
கம்பீரமாய் நியாயம் பேசும் “இளைஞனாய்”
நாட்டிற்குழைக்கும் கடமை மிகு “போராளியாய்”
வீட்டிற்குழைக்கும் அன்பு மிகு “தலைமகனாய்”
பெண்களை சக இனமாய் மதிக்கும் “சகோதரனாய்”
தன்னவளுக்கு “தலைவனாய்”
எல்லோருக்கும் “முதல்வனாய்”
இன்னும் பல நூறு நல்ல அவதாரங்கள் காணும் “மனிதராய்” வாழும்
சகதோழர்களுக்கு.
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்!


