நெல்லை மாவட்டம், அம்பை தாலுகா திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலுக்கு பல விசேஷங்கள் உண்டு. இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்த கோயில். பல்வேறு காலங்களில் பல்வேறு அரசர்கள் இந்த கோயிலில் திருப்பணி செய்துள்ளனர். 10 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் கூட இந்த கோயிலில் திருப்பணி செய்து உள்ளதாக கல்வெட்டு உள்ளது. இந்திய பணக்காரர்களில் ஒருவரான பிர்லாவின் துணைவியார் கூட இந்த கோயிலில் திருப்பணி செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடுக்கு கொண்ட ராஜகோபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டின் விஜய நகர பேரரசு காலத்தில் அமைக்கப்பட்ட மியூரல் வகை சிற்பங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் பிரமிக்க வைக்கும் அளவுக்கு பிரமாதமாக உள்ளது. https://arcus-www.amazon.in/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-ebook/dp/B0CN9QR8TV/ref=sr_1_23?qid=1700108895&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-23


