முத்தாலங்குறிச்சியில் சுமார் 1000 வருடம் பழமையான வீரபாண்டிஸ்வரர் கோயில், ராம விநாயகர் கோயில், லெட்சுமி நரசிம்மர் கோயில் ஆகிய கோயில்கள் மிகவும் சிதலமடைந்து உள்ளது. இந்த கோயிலை திரும்ப கட்ட மண்டல வல்லுனர் குழுவினர் அனுமதி தூத்துக்குடி இணை ஆணையர் அன்பு மணி தலைமையில் நடந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. இதற்கிடையில் இந்த கோயில்களை கட்ட ஸ்தல ஆய்வு செய்து அதற்கான வரைப்படம் வரைய வேண்டும் என இணை ஆணையர் அன்பு மணி உத்தரவிட்டிருந்தார். இதற்காக தூத்துக்குடி மண்டல ஸ்தபதி பார்த்திபன் முத்தாலங்குறிச்சி சிவன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயிலில் உள்ள சிவன், சிவகாமி அம்மாள், பைரவர், விநாயகர், லெட்சுமி நரசிம்மர் சிலைகள் மற்றும் கோயில் கட்டிட நிலைகளை அளவெடுத்தார். முத்தாலங்குறிச்சி நரசிம்மர் கைங்கர்யா சபா தலைவர் சோமசுந்தரம், முத்தாலங்குறிச்சி சிவன் கோயில் பக்த ஜன சபா தலைவர் விஸ்வநாதன் அவர்களின் கோரிக்கை படி கோயில் கட்டும் பணிக்கான வரைப்படம் தயாரிக்கும் ஏற்பாடுகளை செய்தவதாக வாக்களித்தார். அவருடன் அறங்காவலர் காமராசு உடன் இருந்தார். இதற்கான ஆவணங்கள் தயார் செய்து, சென்னை அனுமதிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவன் கோயில் நிர்வாக அலுவலர் கோகுல மணிகண்டன், ராமவிநாயகர், லெட்சுமி நரசிம்மர் கோயில் இன்ஸ்பெக்டர் நம்பி உள்பட அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
முன்னதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிசேகத்துக்கு தயாராக இருக்கும் ஆழிகுடி வெங்கிடாசலபதி கோயில் சுற்றப்புறச்சுவர் கட்டும் பணி, விமானத்துக்கான பணிக்கான வரைப்படம் தயாரிக்கும் பணிக்காக தூத்துக்குடி மணடல ஸ்தபதி பார்த்திபன் ஆய்வு செய்தார்.


