கோவில்பட்டி செண்பகராஜன் நினைவு துவக்கப் பள்ளி தூத்துக்குடி மாவட்டத்திற்கான சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சிறந்த பள்ளிகளுக்கான விருது மற்றும் சுழற்கேடயங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சிறந்த பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 114 பள்ளிகளுக்குக் கேடயங்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 180 மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதில், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள செண்பகராஜன் நினைவு துவக்கப் பள்ளி தூத்துக்குடி மாவட்டத்திற்கான சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் பெற்றுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்விருதினை வழங்கினார்.
பள்ளியை சிறந்த முறையில் நிர்வகித்து வருகின்ற நிறுவனர் சிவ கணேஷ் குமார், தலைவர் சௌந்தர்ராஜன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் பவுன் மாரியப்பன், ரமேஷ், பள்ளி தாளாளர் செயலாளர் மற்றும் பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


