காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக திருச்செந்தூர் கோவில் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு திடீரென்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், கடலில் அலையின் சீற்றம் அதிக அளவு காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக திருச்செந்தூர் கடலில் புனித நீராடும் பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது, திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில், கடலில் பக்தர்கள் கரையோரங்களில் மட்டுமே புனித நீராட வேண்டும். ஆழமான பகுதிக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கடற்கரையோரங்களில் புனித நீராடினார்கள்.


