தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள மூக்குபீறியில் வசித்து வருபவர் ராஜ் வயது (35) கூலி தொழிலாளி. இவர் மனைவி திவ்யா வயது (32) இவர்களுக்கு ரகு என்ற ஆண் மகனும் ரஞ்சனி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 3 வருடங்களாக மனைவியை பிரிந்து தாயுடன் மூக்குப்பீறியில் வசித்து வருகிறார்.
இவருக்கு குடி பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று மாலையில் வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை அவர் நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி சுடுகாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அந்த பகுதி வழியாக சென்ற மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை கண்டு எவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறித்து ஆராய்ந்து பார்த்த போது, இவரது கழுத்தில் இறுக்கப்பட்ட காயமும், உடலில் ரத்த காயமும் காணப்பட்டது.
இதனால் இவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற நாசரேத் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


