கரிசல் என்பது ஒருவகை மண். கரிய நிறம் கொண்டதால் கரிசல் ஆயிற்று. இது தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. பருத்திகளும், வாழை, உளுந்து போன்றவற்றைப் பயிரிடலாம்.
நெல்லை சீமையின் கோவில்பட்டி, விருதுநகர் வட்டாரங்களுக்கும், கொங்கு சீமையின் கோவை, ஈரோடு வட்டாரங்களிலும் கரிசல் பூமிதான். கரிசல் காட்டு ஜமீன்கள் என்றால் இவை அனைத்தையும் அடக்கிய ஜமீன்களைப் பற்றிய வரலாறு என எண்ணிவிடாதீர்கள். இதில் இளையரசனேந்தல், குருவிகுளம் எனும் இரு ஜமீன்களைப் பற்றியதுதான்.
தென்னாட்டு ஜமீன்கள் என்னும் நூலில் 18 ஜமீன்களிலும் கரிசல்காட்டுக்காரர் உண்டு. காமராசு வழக்கம் போலவே தகவல்களைத் தேடித் திரட்டுவதில் மன்னர்தான், ஜமீன்தார்என்றும் சொல்லலாம். அவருக்குப் பாராட்டுக்கள். தென்னாட்டு ஜமீன்கள், தமிழ் ஜமீன்கள், தெலுங்கு ஜமீன்கள் என்றே இரண்டாகப்படுத்திப் பார்க்க வேண்டும். ஆந்திராவிலிருந்து வந்து ஆண்டான்களின் ஆதரவுபெற்ற உற்றார், உறவினர்கள் என்பதை விளக்கவே எழுதியுள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு. ://arcus-www.amazon.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-ebook/dp/B0CN4G74SF/ref=sr_1_23?qid=1699861762&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-23


