தீபாவளி வணிகம் சிறக்க வேண்டி, தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் குங்கும அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காருஅம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி 3ம் மைல் அருகே உள்ள திருவிக நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் சிறக்கவும், தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து விதமான வணிகம் செய்துவரும் வணிகர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வியாபாரம் நடக்க வேண்டியும், விபத்தில்லா தீபாவளியாக அமைய வேண்டியும் சிறப்பு சங்கல்பம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான மகளிர் சக்திகள் கலந்து கொண்டு, 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அன்னையின் அருட்பிரசாசம் வழங்கப்பட்டது. விழாவில் சக்தி பீடத் தலைவர் சக்தி.ஆர்.முருகன், துணைத் தலைவர் திருஞானம், மகளிர் அணி யசோதா, சாந்தி, புவனேஷ்வரி, அகிலா, அனிதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


