விளாத்திகுளத்தில் தெரு நாய் கடித்து பெண்கள் பள்ளி குழந்தைகள் என 15 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பங்களா தெரு, எம்ஜிஆர் நகர் சத்யா நகர் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிக அலவில் இருந்து வந்தது. இந்நிலையில், தெரு நாய் ஒன்று ஆண்கள் பெண்கள் பள்ளி குழந்தைகள் என 15 நபர்களை கடித்து குதறியுள்ளது. காயமடைந்தவர்கள் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய் தொல்லைகள் குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.


