கடம்பாகுளம் பாசன மடை எண் 5, 6 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கடம்பாகுளம் பாசன மடை எண் 5, 6 பாசன வாய்க்கால் நீளம் 7 கி.மீ தூரம் ஆகும். இதன் பாசன பரப்பளவு 220 ஏக்கர் ஆகும்.இதன் மூலம் பயன் பெறும் கிராமங்களாவன தென்தி ருப்பேரை, கோமகள்குடி, மேலக்கடம்பா, இராஜாங்க புரம்,மணல்மேடு, மாவடிபண்ணை ஆகிய கிராமங் கள் பயன்பெறுகிறது. வாய்க்கால்கள் தூர் வாரும் நிகழ்விற்கு ஆழ்வார்திருந கரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜனகர் தலைமை வகித்தார்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் கொடியசைத்து வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மேலக்கடம்பா ஊர்த்தலைவர் பலவேசம், மற்றும் விவசா யிகள் சரவணன், முத்து, சுதா, தூர்க்கையாண்டி, ஆபிரகாம், குருகாட்டூர் ஜேம்ஸ், சித்தர், ஜோஷ்வா, கல்லை ஆறுமுகம், நாலு மாவடி இயேசு விடுகிறார் ஊழியர் சமூக பொறுப்பா ளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


