செய்துங்கநல்லூரில் உள்ள பழமையான சிவன் கோயில் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக நெல்லையப்பர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த உற்சவர் சிலைகளை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தினமும் உற்சவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. திருக்கல்யாணத்தினை யொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர், சிவகாமியம்மாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இரவு 6 மணிக்கு சிவன் சக்திக்கு சீர்வரிசை தட்டுடன் திருக்கல்யாணம் ஏற்பாடு நடந்தது. உற்சவர் சிவன் சக்திக்கு வெகு விமர்ச்ச¬யாக திருமணம் நடந்தது. அதன் பின் சிறப்பு தீபாதரனை காட்டப்படடு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் ஆய்வர் நம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் முத்துராமன், பாலா தலைமையில் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் மற்றும் ஆனமிக பேரரவை செய்திருந்தனர்.


