நேற்று (08.11.2023) இரவு பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள இரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் தேங்கியதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கியிருந்து மழைநீர் மோட்டார்கள் மூலமாக அகற்றப்பட்டது. மேலும், இனிவரும் காலங்களில் கனமழை பெய்யும் பொழுது மேற்குறிப்பிட்ட இரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் தேங்காதவண்ணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி,இ.ஆ.ப., அவர்கள் இன்று 9.11.23 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் திரு.கா.கருணாநிதி அவர்கள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஜேன் கிறிஸ்டி பாய் அவர்கள்,கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் திருமதி.கமலா அவர்கள், கோவில்பட்டி வட்டாட்சியர் திரு. லெனின் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


