தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண். 06001 சென்னை எழும்பூர் -தூத்துக்குடி
புறப்படும் நாட்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை ,
12-11-2023 ஞாயிற்றுக்கிழமை
சென்னை எழும்பூர் புறப்படும் நேரம் இரவு 11-45 மணி
தூத்துக்குடி வந்து சேரும் நேரம்
மறுநாள் மதியம் 12-30 மணி
வண்டி எண். 06002 தூத்துக்குடி -சென்னை எழும்பூர்
புறப்படும் நாட்கள் 11-11-2023 சனிக்கிழமை
13-11-2023. திங்கட்கிழமை
தூத்துக்குடி புறப்படும் நேரம்
மாலை 03-30 மணி
சென்னை எழும்பூர் சென்றடையும் நேரம் மறுநாள் அதிகாலை 04-45 மணி
நிறுத்தங்கள் : தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி.
பயணிகள் நலச்சங்கம் நன்றி
இந்த தீபாவளி சிறப்பு ரயில்களை பெற்றுத் தந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி மாநகர பயணிகள் சிறப்பு ரயில்களை அதிக அளவில் பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளது.


