திருநெல்வேலி ரோஸ்மேரி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளியில் ரோஸ்மேரி அஸ்ட்ரோ க்ளப் துவக்கப்பட்டது
இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் முத்துலட்சுமி வரவேற்புரை கூறி வாழ்த்துக்கள் வழங்கினார். தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு வானியல்அறிமுகம் கருத்துக்களையும் வான் பொருட்களான கோள்கள் விண்மீன்கள் துணைக்கோள் செயற்கை கோள்கள் விண்கற்கள் எறிகற்கள் வால்நட்சத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது திருநெல்வேலி அஸ்ட்ரோ க்ளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமிதாஸ் விண்வெளியும் இந்தியாவின் சாதனைகள் சந்திராயன் 3,ஆதித்யா எல்-1 பற்றி விரிவாக கருத்துரைத்தார். மாணவர்கள் கேள்வி களுக்கு பதில் அளிக்கப்பட்டது பள்ளி அஸ்ட்ரோனமி க்ளப் ஒருங்கிணைப்பாளர் சிவகுரு நன்றியுரைத்தார்


