எனது முகநூல் நண்பர் பத்மபிரியா பாஸ்கர் அவர்கள் தனது தாயார் எனது நூலான தலைத் தாமிரபரணியை பரிட்சைக்கு படிப்பது போல படிக்கிறார்கள் என பதிவு செய்திருந்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 82 வயதான அவரது தாயாருக்கு ஒரு கண் தெரியாதாம். அவர்கள் தாமிரபரணி மீது வைத்திருக்கும் பற்று என்னை ஆச்சரியப்பட வைத்தது. இதுபோன்ற தாமிரபரணி தாசர்கள் இருக்கும் வரை எனது எழுத்துப்பயணம் தடைபடாமல் செல்லும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


