மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு வரும் நவ.10 ஆம் தேதி முதல் ரூ.1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. எனினும் தகுதியான நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


