தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார்.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப் படை அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார். விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர் ரெக்சிலின், பள்ளியின் செயலர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ராஜதுரை சாமுவேல், மகமை தலைவர் நடராஜன், பொருளாளர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


