தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடியில் 06.11.2023 அன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வல்லநாடு கால்நடை உதவி மருத்துவர்,தூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மற்றும் தூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஆகியோர் பங்கு பெற்றனர்.



