திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வரை செல்வதற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச வேன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் தென்கிழக்கு மூலையில் கட்டணக் கழிப்பிடம் அருகே 4 வேன்கள் இந்த சேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் இந்த வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளும்படி வேண்டுகிறோம்


