தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நவீன மைக்ரோஸ்கோப் கருவியை அமைச்சர் கீதாஜீவன் மக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோய்க்குறியியல் துறையில் மருத்துவ மாணவர்களின் படிப்பு மற்றும் ஆராய்ச்சி வசதிக்காக புதிதாக வாங்கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள மைக்ரோஸ்கோப் கருவியை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜுவன் துவக்கி வைத்தார். ராஜ் அசோசியேட்ஸ் நிறுவனர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கலைவாணி கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட சைலஸ் ஜெயமணி, எலும்புமுறிவு சிகிச்சைத் துறைத் தலைவர் பாவலன், நோய்க்குறியியல் துறைத் தலைவர் அரசி ராஜேஷ் அஸ்வினி பிஸ்சரிஸ் பொறுப்பாளர் முனீஸ்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நுண்நோக்கியின் மூலம் ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் திசுவில் ஏற்படும் மாறுதல்களைத் தெளிவாகவும், துல்லியமாகவும் பார்த்துப் பயன்பெறுவார்கள்.


