தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் ஜவுளி வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் ஜவுளிகள் எடுக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களிலும் கூட்டம் காணப்படுகிறது. தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் ஜவுளிக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. பெண்களுக்கான சேலைகள், சுடிதார் உட்பட புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



