“தவழ்ந்து வரும் தாமிரபரணி” என்ற இந்த நூல் எழுதிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பற்றி மிக நன்றாகத் தெரிந்தவர். தாமிரபரணி பற்றியும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இந்த நூல் அவரின் 35 வருட உழைப்பில் வெளிவந்துள்ளது . இவர் இந்நூலில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டுகள், பாலம் தோன்றிய வரலாறு, சாலைகள், அபூர்வ சிற்பங்கள் மற்றும் ஆதிச்சநல்லூர் – கொற்கை – சிவைகளைத் தமிழர் நாகரீகம் போன்றவற்றை பற்றி எழுதியுள்ளார். தாமிரபரணி தோன்றும் இடத்திலிருந்து தாமிரபரணி முடியும் இடம் வரை அநேக வியக்கதக்க காரியங்களை விளக்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் உருவானது முதல் தற்போது வரைக்கும் பணிபுரியும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டிருப்பதை வரவேற்கிறேன். இதில் தாமிரபரணி கரை பறவைகள் மற்றும் எனது தொகுதிக்குட்பட்ட 150 வருடங்கள் பழமையான சாயர்புரம் – பேய்க்குளம் விவசாயிகள் சங்கம் பற்றிய தகவல்கள் எல்லாம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. பக்கிள் துரை என்ற ஆங்கிலேய மாவட்ட ஆட்சித் தலைவர் தாமிரபரணிக்காகச் செய்த பணிகள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சியாய் இருக்கிறது.ஸ்ரீவைகுண்டத்தில் புதிய பாலம் கட்டிய தகவல்கள் உள்பட அனைத்து படைப்புகளையும் வரலாறாக படைத்திருக்கும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பாராட்டுக்குரியவராவார். இந்த நூல் அனைவரும் வாங்கி படித்து பயன்பெற கூடிய வரலாற்றுப் பொக்கிஷம். இந்த “தவழ்ந்து வரும் தாமிரபரணி” புத்தகம் வருங்கால சந்ததிகளால் பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டு வேர் ஆகும்.https://arcus-www.amazon.in/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-ebook/dp/B0CMMZ5NH4/ref=sr_1_22?qid=1699267652&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-22


