தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் ஆர்த்தி கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் அருள்ராஜ் அவர்கள் கலந்து கொண்டனர்.
இம் முகாமில் ரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உப்பு சத்து , கொழுப்பு, பாத பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை , மற்றும் உணவுப்பொருள் கண்காட்சி, யோகா பயிற்சி, புகைப்பட விழிப்புணர்வு கண்காட்சி ஆகியவை நிகழ்ச்சி நடைபெற்றது. இம்முகாமில் 250 நபர்கள் கலந்து கொண்டனர் . அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.


