கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நேற்றும்,இன்றும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, ஐசிஎம் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமிற்கு வந்திருந்த மக்களிடம் விபரங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், விண்ணப்பங்கள் பதிவு குறித்தும் முகாமில் இருந்த ஊழியர்களிடம் கேட்டு அறிந்தார்.


