தூத்துக்குடியில் நர்சரி பள்ளிகளின் சங்கம் சார்பாக நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட நர்சரி பள்ளிகளின் சங்கம் சார்பாக நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, கலை இலக்கியத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றினார். முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, சங்கத்தின் தலைவர் பாரதி சங்கரலிங்கம், செயலாளர் ஜோசப், பொருளாளர் ஜாய் பெல், ஜீவானா கோல்டி, தாளாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


