கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏபிகே பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படியும் பள்ளி பொருளாளர் ரத்னராஜா, தங்கமணி, திருபால்ராஜ், மனோகரன் ஆலோசனையின்படியும் பள்ளி குழு உறுப்பினர் தாழையப்பன் முன்னிலையில் பேரிடர் மேலாண்மை மற்றும் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இசக்கிராஜ், காந்திராஜ், கார்த்திக்குமார், அருள்ஜோதி, ரெக்ஸ் செல்வகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் விபத்தில்லா தீபாவளி குறித்த கருத்துக்களையும், தீ விபத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்ற பயிற்சியை ஒத்திகையோடு செய்து காட்டினார். மேலும் விபத்தினால் அடிபட்டவரை எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது, விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வுகளை செயல் வடிவில் செய்து காட்டினர்.
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் தகுந்த விளக்கம் கொடுத்தனர். பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிறைவாக ஆசிரியை ஐஸ்வர்யம் நன்றி கூறினார்.


