மாரியப்பன் சொன்னான்.
“ஏலே இவனுவ விளையாட்டை காட்ட ஆரம்பிச்சிட்டானுவ. நாம கவனமா இருக்கணும்”.
காளிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடன் இருந்தவன் ஒருவன் தீடிரென்று இறந்த போனான் . அதுவும் தற்கொலை செய்தது போல செட்டப் செய்து இருக்கிறார்கள். மனது உடைந்து போனான்.
“தனக்கு வலது கை அல்லவா? ரகு”.
அவன் உயிரோடு இருந்தால் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாமே?
அவன் கண்களில் இருந்த கண்ணீர் வடிந்தது. அருகில் செல்வி வந்து நின்றாள்.
“அழாதே காளி. பாத்துக்கலாம். இப்போத்தான் நீ தைரியமாக இருக்கணும். நாம வேலையை நாம செய்வோம். தாமிரபரணி தாயை காப்பாத்த என்ன வேணுமுன்னாலும் செய்வோம். நான் உன் கூட இருக்கேன்”.
செல்வியின் பேச்சு காளிக்கு ஆறுதலாக இருந்தது.
“அய்யா ஆத்துல மணல் அள்ளுனா வருங்காலத்தில ந்ம்ம ஊரே அழிஞ்சு போவுமே. இன்னைக்கு ரகு இல்லாம போன மாதிரி எத்தனை பேரு உயிர் போகப்போவுதோ தெரியலையே. அது மட்டுமா?” காளி கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.
அவனால் பேச முடியவில்லை.
“சரி. விடக்கூடாது எப்படியாவது கொலைகாரனை கண்டு பிடிச்சு அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்”. தன்னை தேர்த்திக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயரானான்.
மாரியப்பன், காளி, செல்வியை நோக்கி தேன்கூடு இளைஞர் மன்றத்தினர் வந்தனர்.
அனைவரும் உறுதியாக இருந்தனர். “இன்னைக்கு நம்ம ஊரு சப்இன்ஸ்பெக்டரா இருக்கிற சங்கரலிங்கம் நல்ல மனுசன். யாருக்கிட்டேயும் லஞ்சம் கிஞ்சம் வாங்கத மனுசன். நியாயம் பக்கம் நிப்பாரு. எச்சிக்காசுகெல்லாம் ஆசைப்பட மாட்டாரு. அதனால நிச்சயம் கொலை காரனை கண்டு பிடிச்சிருவாரு.” காளி உறுதியாக சொன்னான்.
இளைஞர்கள் அனைவர் மத்தியிலும் கோபம் எழுந்தது.
“இப்படி செஞ்சா என்னடே? இன்னைக்கு போஸ்ட் மார்டம் முடிச்சு பாடியை ஹைரவுண்ட் ஆஸ்பத்திரியில தருவானுங்க. நாம வாங்க கூடாது. நம்ம இளைஞர்கள் எல்லாம் குத்தவாளியை பிடிச்சாத்தான் பாடியை வாங்குவோம். ம ணலை அள்ளுறதை தடை செஞ்சாத்தான் பாடியை வாங்குவோமுன்னு பிடிவாதமாக இருப்போம்”. மாரியப்பன் சொன்னதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
“அதுவும் சரித்தான்டே”.
அனைவரும் உறுதியானார்கள். உடனடியாக இவர்கள் ஊருக்குள் சென்றனர். ஊர் மக்கள் அனைவரிடமும் இந்த விவரத்தை சொன்னார்கள். அனைவரும் அந்த முடிவை ஆதரித்தார்கள்.
சிறிது நேரத்தில் ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் அங்குள்ள சங்க மடத்துக்கு முன்பு கூடினார்கள்.
“எவ்வளவு ஒத்துமையா இருந்த ஊரு. இந்த மணல் அள்ளுற கொல்லையில போறவனுவ என்னைக்கு இந்த ஊருல காலடி எடுத்து வைச்சனுவளோ தெரியலை. அன்னைக்கே சனி பிடிச்சிட்டு”.
பொட்டலா பாட்டி அலறல் விட்டாள். அவ்வளவு தான் கீழத்தெருவில் இருந்த மேலத்தெரு வரைக்கும் பெண்கள் அனைவரும் ஒன்ற திரண்டனர். பிணத்தை வாங்க கூடாது என முடிவு செய்தனர். தங்களது போராட்டத்தினை வலுப்படுத்த அனைவரும் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டமாக கிளம்பினர். இதனால் 11 மணி ஆண்ட்ரூஸ் டவுண் பஸ் நிரம்பி வழிந்தது. அவர்கள் உற்சாகத்தினை பார்த்த பலர் அவர்களின் நியாயத்தினை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த தகவல் சங்கரபாண்டிக்கும் நாட்டாமைக்கு போய் சேர்ந்தது. இருவரும் அதிர்ந்தே போனார்கள்.
******
சங்கரபாண்டியன் நாட்டாமை இரண்டு பேரும் அந்த பம்பு செட் முன்னால் நின்றனர்.
இருவருக்கும் கண்கள் சிவந்து இருந்தது.
“யோவ் நாட்டாமை இந்த சப் இன்ஸ்பெக்டர் பய விடக்கண்டன் தொடக்கண்டானால இருக்கான். அவன் விளங்க விட மாட்டான் போல தெரியுது”.
“ஏமுய்யா?”.
“கொலையாளியை கண்டிப்பாக இன்னைக்கு மாலைக்ககுள்ள பிடிச்சிருதேன் என்று சொல்லுதான்”. சங்கரபாண்டியன் கோபப்பட்டான்.
“பொறவு அவரு வேலையை அவரு பாப்பாரு. நாம வேண்டாமுன்னு சொல்ல முடியுமா?”
சரித்தான் நல்லா சொல்லுவீரு. பிடிப்பட்டா. நாம ஜோலி முடிஞ்சு போவோமே. ஜெயில போய் களித்தான் திங்கணும்”. ச்ங்கரபாண்டியன் பேசியவுடன் நாட்டாமை ஆடித்தான் போய் விட்டார்.
“சரி இப்பவே நான் ஹைகிரவுண்ட்போய் ஏதாவது செய்ய முடியுதான்னு பாக்கேன்”.
“நீர் அங்கெல்லாம் ஒண்ணும் புடுங்க வேண்டாம். முதலுல உள்ளூர் பயலுவ ஒத்துமையை கலைக்கணும். அவனுவ பாடியை வாங்க மாட்டேன்னு பொம்பளையல திரட்டிக்கிட்டு அலையிறானுவ. அவனுவல ஒன்னு சேர விடக்கூடாது”.
“ எனன் சங்கரபாண்டி இப்படி சொல்லுத. ஒரு உயிரை பறிகொடுத்துருக்கானுவ சும்மா இருப்பானவளா? ஏற்கனவே நம்ம கிட்ட இருந்தவனுவளே பாதி பேரு அவனுவ கூட சேர்ந்துகிட்டானுவ”. நாட்டாமை தனது இயலாமையை சொன்னார்.
யோசித்தான் சங்கரபாண்டி.
“யோவ் நாட்டாமை யோசனை பண்ணி பாருவே எங்க அடிச்சா எங்க வலிக்குமுன்னு பாரும். பாசத்தை வச்சி அவனுவல பிரிக்க வேலை செய்யும்”.
நாட்டாமை அமைதியாக இருந்தார்.
“காளியையும், செல்வியையும் ஊரை விட்டு வெளியே விரட்ட ஏதாவது வழி இருக்கான்னு பாரும். அதுக இரண்டும் வெளியே போயிட்டா எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துரும். அதுக்குள்ள நான் இந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கத்தை ஏதாவது வழி செய்ய முடியுமான்னு என் முதலாளியை வச்சி பாக்கிறேன்”. சங்கரபாண்டியன் வெறித்தனமாக பேசினான்.
“என்னத்தையோ செய். நிம்மதியா இருந்தேன். என்னை பண ஆசை காட்டி இறக்கி விட்டுட்ட கடைசியல என்னை எங்கேயாவது மாட்டி விட்டுறாதே”.
இருவரும் அமைதியாக பிரிந்தார்கள்.
****
பாளை அரசு ஹகிரவுண்ட் ஆஸ்பத்திரி/
ஊர் மக்கள் பெண்கள் உள்பட பலரும் அங்கே கூடி நின்றார்கள்.
சங்கரலிங்கம் எஸ். ஐ வந்தார்.
“ ஏடேய் உங்களுக்கு எல்லா விதத்திலும் நான் உதவி செய்ய தயரா இருக்கேன். பொம்பளையளா நடுரோட்டுக் கொண்டு வராதீங்க டேய்”.
ச”£ர்வால் உங்களுக்கே நியாமா இருக்கா. இந்த ஊருல தட்டி கேட்ட வகைக்கு ஒரே நாளுல கிணத்தில தள்ளி கொன்னுபுட்டானுவ. இனிமே நாங்க ஊருல நிம்மதியா அலையமுடியுமா? எங்க நிக்கான் கொலைகாரன் .எப்போ வருவான். எப்போ கொல்லுவான்னு யாருக்குமே தெரியாமலே போயிருமே”. காளி வேகமாக பேசினான்.
“சரி தாண்டே நீங்க சொல்றது எல்லாமே எனக்கு புரியுது. நான் வேலை பாக்கிற இடத்தில ஒருத்தன் வந்து கொலை பண்ணியிருக்கான்னு நினைக்கும் போது எனக்கே வருத்தமா இருக்கு. நானும் தூங்க மாட்டேன்டே. கொலை காரனை கண்டு பிடிக்காம விடமாட்டேன்டே”. சங்கரலிங்கம் சூளுரைத்தார்.
“அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் சார்வால். என்னைக்கு எங்க ரகு சாரயம் குடிச்சான். அவன் சாரயம் குடிச்சிட்டு குடிபோதையில கிணத்தில விழுந்த மாரி ஏற்பாடு பண்ணியிருக்கானுவ. கொலைகாரன் எவ்வளவு பெரிய கிரிமினல். அவனை கண்டு பிடிக்க வேண்டாம்”. செல்வி உரக்க பேசினாள்.
“இங்க பாருங்க போஸ்ட் மார்டம் முடிவு வரட்டும். என்ன ஏதுன்னு முடிவு பண்ணலாம்”. சங்கரலிங்கம் எஸ்.ஐ அமைதியாக பேசினார்.
“இல்லை சார்வால். நாங்க பாடியை வாங்க மாட்டோம். முதலில நீங்க குத்தவாளியை கண்டு பிடிங்க. அவனை விலங்கு மாட்டி இழுத்துட்டு வந்து ஜெயிலுல அடைங்க. அதுக்கப்புறம் நாங்க பாடியை வாங்குறோம். நீங்க சொல்றதை கேட்கோம்”.
“ஏடேய் விசாரனை நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்குள்ள அவசரப்படாதீங்க”.
“என்ன நடந்துக்கிடடு இருக்கு சார்வால். நேத்து லாரியை மறிச்சி இருக்கான். அன்னைக்கு ராத்திரியை கிணத்தில மிதக்க விட்டுட்டானுவ. இதுல விசாரிக்க என்ன இருக்கு. இதுதான் கொலைத்தான். கொலையாளியை பிடிங்க”. மாரியப்பன் விடாமல் பேசினான்.
சங்கரலிங்கம் மிகவும் யோசனையோடு இருந்தார். மிகவும் நல்ல அதிகாரி. மற்ற போலீஸ் என்றால் நேற்று மறித்த ரகுவைத்தான் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போயிருப்பார்கள். ஆனால் இவர் நியாயமாகத்தான் பேசினார்.இப்போதும் நியாயமாகத்தான் இருககிறார். எப்போதும் லஞ்சமும் வாங்க மாட்டார். யார் பின்னாலும் போகவும் மாட்டார். ஆனால் கொலையாளியை தெரியாமல் நாம் எங்கேயும் போகக்கூடாது. மக்கள் உறுதியாக இருந்தனர்.
அனைவரும் அங்கே சாலையில் அமர ஆரம்பித்தனர்.
சங்கரலிங்கம் எஸ்.ஏ. என்ன செய்வது என்று தெரியாமல் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
*******
“குடிகாரன் இல்லாத ஒருத்தனுக்கு தண்ணீயை ஊத்தி கொடுத்து குடிகாரனா ஆக்கி ஜோலியை முடிச்சாச்சு. இப்போ இங்க துடியா நிக்க பயலுவலையும் ஏதாவது சொல்லி ஜோலியை முடிக்கணும்”.
நாட்டாமையின் எடுபிடி ஒருத்தன் மிக வேகமாக பேசினான். அவன் நல்ல போதையில் இருந்தான். எனவே அவன் கண் சிவந்திருந்தது. கொஞ்சம் நடையில் தளர்ச்சி இருந்தது. ஆனால் பேச்சு எப்படியாவது பலிவாங்க «வ்ண்டும் என்பது போலவே இருந்தது.
“என்ன செய்யலாம்”. நாட்டாமை கேட்டார்.
“நாட்டாமை ஒரு விசயம் தெரியுமா? செல்வியும், காளிமுத்து ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறாங்க”. எடுபிடி கண்ணை உருட்டிய படி சொன்னான்.
“காதலிச்சா நமக்கென்ன”. நாட்டாமைக்கு கிரிமினலாக யோசிக்க தெரியவில்லை.
“அதை வச்சி ஒரு விளையாட்டை போடும்”. எடுபிடி சரியான கிரிமினல். கொஞ்ச காலம் மும்பை தாராவி ரயில்வே தண்டவாளம் அருகில் சாரயம் காய்ச்சும் இடத்தில் இருந்தவன்.
“என்ன விளையாட்டை போட முடியும்?”. அப்பாவியாக கேட்டார் நாட்டாமை.
“நீரு எல்லாம் எப்படி நாட்டாமை ஆனீறோ தெரியலை. பணம் சம்பாத்தியம் பண்ணணுமுன்னா கிரிமினல் புத்தி வேலை செய்யணும்”. நாட்டாமை முகத்து அருகில் வந்து நின்று அவரை எக்காளம் செய்யும் படி கேட்டான். அதன் பின் கையை தட்டி கேலி செய்தான்.
நாட்டாமை அமைதியா இருநதார்.
“ நாட்டாமை செல்வியோட அம்மையை கரைட் பண்ணும்”.
“என்னலே சொல்லுத. என் வயது என்ன? என் ஜோலி என்ன? என்ன வார்த்தை சொல்லுத கழுதைபயலே” அதிர்ந்தே போய் விட்டார் நாட்டாமை.
“விளங்காத நாட்டாமை. நீர் அவளை கரெட் பண்ண வேண்டாமுவே. அவக்கிட்ட உன் மவளை ஏமாத்தி உட்டுட்டு போயிருவான் காளின்னு சொல்லி, இன்னைக்கு ராத்திரி பஞ்சாயத்தை கூட்டச்சொல்லும். இராத்திரி ஆஸ்பத்திரியில இருந்து இரண்டு பேரும் வந்த உடனே அவுகளை யோசிக்க விடாம தாலிகட்ட வையும். அதுக யோசிக்க முன்னால இரண்டு பேரையும் கேலி செஞ்சே ஊரை விட்டு விரட்டிருவோம்”. குடிகாரனா இருந்தாலும் நல்ல யோசனையாத்தான் இருக்கு. நாம சேதராம் இல்லாம தப்பிச்சிக்கிடலாம்.
“நல்ல் யோசனையாத்தான் இருக்குடே. இந்த காரியத்தை யாருடே செய்வா?”. மீண்டும் அப்பாவித்தனம்.
“நல்லா இருக்கே. கமிஷன் வாங்கும்போது அச்சிக்குண்டு போல இனிச்சுது. காரியமுன்னா மட்டும் இன்னொரு ஆளு வேணுமோ? இதுக்குன்னு ஆள் வச்சா செய்ய முடியும். உம்ம கூட பழகுனதுக்கு நானே செய்யுறேன். இப்பவே போய் செல்வி அம்மாவை சரிபடுத்துறேன்”. எடு பிடி கவனமாக இருந்தது.
“சரி டே சரிடே நீ செய். உன்னை கவனிக்கேன்”. நாட்டாமை முகத்தில் உற்சாகம் வந்தது.
“எல்லாம் சரி நாட்டாமை. கமிஷன்தொகை எனக்கு ஒரு பங்கு வந்து சேரணும். ஆமாம்”. எடுபிடி வரவு விசயத்தில் கவனமாக இருந்தான்.
நாட்டாமை தலையசைத்தார்.
******
திருநெல்வேலி ஹைகிரவுண்டுக்கு உயர் அதிகாரிகள் வந்தனர்.
“இங்க பாருங்க சட்டம் தன் கடமையை செய்யும். நீங்கள் இடைஞ்சல் செய்ய வேண்டாம்”. திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சொன்னார்.
“இன்னும் சிறிது நேரத்தில் டி.ஐ.ஜி வருவாரு. நீ ஒத்துழைக்கலைன்னா அவர் வந்து லத்தி சார்ஜ் பண்ணினா தாங்க மாட்டிய. எழுந்திருச்சி ஓடிப்போயிருங்க”. மக்களை பார்த்து மிரட்டினார்.
“சார்வால். நாங்க எங்க உரிமையை கேட்கோம். அப்பாவி ஒருத்தன். மருந்துக்கு கூட சாரயக்கடை பக்கம் போகதவனை. சாரயத்தை ஊத்தி கொடுத்து குடிக்க வைச்சி கொலை பண்ணி போட்டு இருக்காணுவ. அவனை கொன்னது யார் என்ன ஏதுன்னு அரஸ்ட் பண்ணாம எங்களை மாரி அப்பாவிகளை லத்தி சார்ஜ் பண்ணுவேன்னு சொல்லுதியலே இது நியாமா? வரட்டுமய்யா உங்க உயர் அதிகாரி வரட்டுமய்யா. நாங்க சொல்லிப்பாக்கோம்”. கூட்டத்தில் பொட்டலா பாட்டி எழுந்து ஆவேசமாக பேசினாள்.
ஏழைகள் பேச்சு அம்பலத்தில ஏறாமலே போயிருமா?
வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே டிஐ.ஜியும் வந்து சேர்ந்தார்.
மக்களை பார்த்தார். பாவப்பட்ட மக்கள். இவர்கள் பாவம் எதுவும் எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பேச்சு எல்லாம் நியாயமாகத்தான் இருந்தது.
“இங்க பாருங்க. இன்னைக்கு ராத்திரிக்குள்ள நாங்கள் குற்றவாளியை எப்படியாவது கைது பண்ணுறோம். இன்னைக்கு நீங்க பாடியை வாங்க வேண்டாம். நாளைக்கு பார்த்துக்கலாம்”. என கூறிவிட்டு, எஸ்.பி இடம் தகவலை சொல்லி கூட்டத்தினை கலைக்கச்சொன்னார். அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
அப்போதைக்கு அந்த பிரச்சனை முடிந்தது. ஆனால் மறு நாள் வேறு மாதிரி பிரச்சனை நடக்க போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்¬¬.
இரவு 8 மணி இருக்கும். காளி, செல்வி, நண்பர்கள் மற்றும் மக்கள் எல்லோரும் கிராமத்துக்கு டவுண் பஸ்ஸில் வந்து இறங்கினர்.
அங்கே கோயில் முன்பு ஊர்க்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
பஸ்ஸில் இருந்த செல்வியையும் காளியையும் கூட்டத்துக்கு அழைத்து சென்றார்கள்.
அங்கே செல்வியின் தாயார் அழுத விழியுடன் நின்று கொண்டிருந்தாள். அருகில் நாட்ட¬மையின் கைகூலிகள் அந் த அம்மாவுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்தனர்.
நாட்டாமை கேட்டார்.
“ என்னடே காளி, செல்வியை நீ இதுவரைக்கும் காதலிச்சிட்டு. இப்போ திருமணத்துக்குமாட்டேன்னு சொல்லிட்டியாமே”.
“என்ன நாட்டாமை விளையாடுறீங்களா? நானும் செல்வியும் முறைப்படி திருமணம் முடிக்க போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை”. உறுதியாக சொன்னான் காளி.
“அதெப்படிடே. நீ பாட்டுக்க அவளை ஊர் ஊரா கூட்டிட்டு அலைவ. நாங்க ஊர்காரங்க சும்மா முட்ட கட்டிக்கிட்டு நிக்கனுமோ . நல்லா இருக்குடே நியாயம்”.
“நாட்டாமை. இது எங்க குடும்ப கதை. இரண்டு பேரும் வேலைபாக்கோம். வேலை விசயமா அலையுறோம். அதுல்ல என்ன தப்பு” ஏற்கனவே எரிச்சலாக இருந்த காளி, மிகவும் கோபமாக கேட்டான்.
“எதுடே குடும்ப கதை. இங்க அவ அம்மா அழுது என் மகளுக்கு ஏது வாழ்க்கைன்னு கேட்டு சொல்லுங்கன்னு வந்து ஊர்க்கூட்டத்தில நிக்கா. உங்களுக்கு குடும்ப கதைன்னா உங்க வீட்டுக்குள்ள நாலு சுவத்துக்குள்ள வச்சிருக்கனும்”.
காளிக்கு புரிந்தது. இங்கே பிரச்சனை நமது கல்யாணம் இல்லை. ஏதோ வலை விரிக்கிறான் நாட்டாமை. என்ன செய்ய யோசித்தான்.
“நான் கொஞ்சம் செல்விகிட்டே தனியா பேசனும்”. காளி நாட்டாமையைநோக்கி கேட்டான்.
“நல்லா இருக்குடே அவளை தனியா கூட்டிட்டு போய் மிரட்டலாமுன்னு நினைக்கியா? அதெல்லாம் சரிப்பட்டு வராதுடே”. நாட்டாமை அவளை தனியாக கூட்டிக்கொண்டு போக சம்மதிக்க வில்லை.
செல்விக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“செல்வி. இவர்கள் வேறு ஏதோ பிரச்சனையை திசை திருப்ப நம்ம வாழக்கையில் கை வைக்க பாக்காங்க. என்னைக்குனாலும் நாம சேரத்தான் போகிறோம். பராவாயில்லை இப்பவே திருமணம் பண்ணிக்கலாம்”. என காதில் சொன்னான்.
“என்னடே அங்க குசுகுசுன்னு பேசுத. உன்னை குற்றாவாளி ஆக்கியாச்சி. நீ. ஒழுங்கு மரியாதையா இருக்க வழியை பாரு. நாட்டாமை கிட்ட பேசு”. எடுபிடி அவனை அடிக்க ஓடினான். அவனை முறைத்து பார்த்தான் காளி. மறு நிமிடம் அடங்கி போய் நின்றான்.
“ஏடே முதலில அவுக இரண்டு பேரையும் பக்கத்தில பக்கதில நிக்க உடாதீங்க. பிரிங்கடே”.
ஒருவன் வந்து இருவர் கை¬யும் பிடிக்க வந்தான்.
அவர்கள் யாரையும் செல்வி கையை தொட விடவில்லை. அவள் கையை இறுக்க பற்றினான் காளி.
“நில்லு. அந்த அம்மா என்ன சொல்லுது. நான் செல்வியை ஏமாத்திட்டேன்னு சொல்லுது அப்படித்தானே”.
கூட்டமே அமைதியாக இருந்தது.
“சரி. நான் ஏமாத்தல. இப்பவே இந்த அம்மன் முன்னால அவ கழுத்தில தாலியை கட்டுதேன். கொண்டா தாலியை எவனும் வேறு எதுவும் பேசக்கூடாது”.
யாராலும் எதுவும் பேச முடியவில்லை. அனைவரும் வாயடைத்து போய் நின்றனர்.
செல்வியிடம் சொன்னான், “என்னைக்கு என்றாலும் நாம இரண்டு பேரும் கல்யாணம் முடிக்கத்தான் போகிறோம். பார்த்துகலாம். அதை இப்போதே முடிப்போம்”.
நாட்டாமைக்கு சிரிப்பு வந்தது.
“சிக்கினான் செவலைபிள்ளை” என மனதுக்குள் சிரித்தார். அவருக்கு இவ்வளவு சீக்கிரம் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் என நினைக்கவில்லை.
கோயில் பூசாரி அம்மன் கழுத்தில் இருந்து தாலி கயிறை கொண்டு வந்து தர. தாலியை செல்வி கழுத்தில் கட்டினான் காளி.
சில பெண்கள் குலவை போட்டனர். இந்த குலவையில் சுரத்தை இல்லை. அதை கூட ரசிக்க முடியாமல் ஒரிடத்தில் நின்ற நாய் ஒன்று ஊழையிட்டது.
அடுத்த நிமிடம பிரச்சனை முடியும் என நினைத்தார் நாட்டாமை. ஆனால் பிரச்சனை வேறு மாதிரியாக உருவெடுத்தது.
( அந்த பிரச்சனைதான் என்ன?)


