தூத்துக்குடியில் கல்லறை திருநாளை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்த மூதாதையரின் ஆன்மாக்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறைத் திருநாள் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அப்போது தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை புதுப்பித்து மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களால் கல்லறைகளை அலங்கரித்தும் பிரார்த்தனை செய்வார்கள்.
அதன்படி இன்று கல்லறை திருநாளையொட்டி, தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான கல்லறை தோட்டங்களில் கல்லறையில் மலர்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கல்லறைத் திருநாளை முன்னிட்டு இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.


