01.11.2023 புதன்கிழமை காலை 7.40 மணியளவில் ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில் தியாகராஜ பாகவதர் அவர்களின் 63 வது நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏரல் காங்கிரஸ் பிரமுகர் அய்யம் பெருமாள் ஆச்சாரி அவர்கள் தலைமை வகித்து தியாகராஜ பாகவதர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். விஸ்வகர்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆச்சாரி முன்னிலை வகித்தார். பாகவதர் ஆற்றிய பல சிறப்புகளும் பெருமிதங்களும் உரையாடப்பட்டன. சாயர்புரம் வாய்ப்பாட்டுக் கலைஞர் கந்தன் ஆச்சாரி அவர்கள் பற்றிய பாடல்களை பாடினார். ஏரல் அண்ணாமலை ஈஸ்வரர் கோயில் பொறுபாளர் கணேசன். சமூக நல சிந்தனைகள் கொண்ட பசி போக்கும் தளம் பொறுப்பாளர் ஐயப்பன் எனப்பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல் ராஜன் நன்றி கூறினரர்.
MKT
இது ஏழாம் ஆண்டாகத் தொடரும் நிகழ்ச்சியாகும்.


