தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலயத்தில் செபமாலை மாதத்தை முன்னிட்டு அன்னை மரியாளின் நிலைக்காட்சி நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் செபமாலை மாதத்தை முன்னிட்டு பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஞாயிறு மறைக்கல்வி மாணவியர்களால் அன்னை மரியாளின் நிலைக்காட்சி நிகழ்வு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் குழந்தைச் செல்வங்கள் தத்ரூபமாக அன்னை மரியாளைப் போன்று அலங்கரித்து வந்தனர்.
புனித செபமாலை மாதா, புனித சகாய மாதா, புனித வேளாங்கண்ணி மாதா, புனித அமல உற்பவ மாதா, துன்பங்களின் முடிச்சு அவிழ்க்கும் மாதா, புனித லூர்து மாதா, புனித பரலோக மாதா, புனித அதிசய மணல் மாதா, புனித யாகுல மாதா, புனித பனிமய மாதா ஆகிய 10 வகையான மாதாவை போன்று அப்படியே மாணவிகள் பிரதிபலித்தனர். இதை பங்கு மக்கள் அனைவரும் கண்டு ரசித்து பாராட்டினார்கள். இவை அனைத்தையும் ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


