தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஸ்டெம் பூங்காவில் மாவட்ட வானவியல் மன்றம் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நிலவு நோக்கு நாள் கொண்டாடப்பட்டது.
தொலை நோக்கி மூலம் நிலவைக்காணும் நிகழ்வை தூத்துக்குடி மாநகராட்சி நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி பாஸ்கர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட வானவியல் மன்ற தலைவர் எழிலன் நிலவு நோக்கு நாள் குறித்து உரையாற்றினார். அரிமா சங்க மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் முருகன் ஆசிரியர் கல்யாண சுந்தரம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். குழந்தைகள் பெரியவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.


