தூத்துக்குடியில் வருகிற நவ.3ம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு நேர் காணல் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தி.மு.க. கழக தலைவரும், தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கு ஏற்ப மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினால் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் தூத்துக்குடி மாநகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க்கழக அளவிலான இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அதன்படி வருகிற 03.11.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00மணி அளவில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைத்து மாநில இளைஞரணி துணை செயலாளர்கள்முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற இருக்கிறது.
இதில் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க் கழக அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருகை தரும் அனைவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான கல்விச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, கழக உறுப்பினர் அட்டை, இளைஞரணி போன்ற கழக அமைப்புகளில் ஏற்கனவே பணியாற்றியிருந்தால் அது தொடர்பான புகைப்படத்தொகுப்பு மற்றும் ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


