ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 – ஆம் தேதி சர்வதேச அனிமேஷன் தினமாக கொண்டாடப்படுகிறது . அசையும் படங்களைக் கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்கள் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தாலும் , தற்போது எல்லா தரப்பு மக்களின் விருப்பமாக திகழ்கிறது . _ அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பனியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக ” சர்வதேச அனிமேஷன் தினம் ” கொண்டாடப்படுகிறது . 28.10.1892 அன்று சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையரங்கில் ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வ தேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது . யுனெஸ்கோவின் ஒரு அங்கமாக திகழும் சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் , 2002 – ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தியது . இந்நாளில் உலகின் பல பகுதிகளில் , அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக , புதிய அனிமேஷன் குறும்படங்கள் மற்று திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன


