தூத்துக்குடி தென்காசி மாவட்ட அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் திருப்பணி சம்மந்தமான மண்டல வல்லுநர் குழு கூட்டம், தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இணை ஆணையர் ம.அன்புமணி தலைமை வகித்தார். 44 கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழக்கு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மண்டல செயற்பொறியாளர் ஆறுமுகம், தூத்துக்குடி மண்டல ஸ்தபதி பார்த்திபன், தூத்துக்குடி மண்டல உதவி பொறியாளர் சத்யன் ஆசாரி, தூத்துக்குடி மாவட்ட உதவி பொறியாளர் ரங்கசாமி, சைவ ஆகம கல்யாணசுந்தரம் பட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தென்காசி தூத்துக்குடி கோயில்களில் திருப்பணி செய்யும் வேலைகளை ஆய்வு செய்து அனுமதிக்கு சென்னை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கோயில் நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள்,அறங்காவலர்கள், பூசாரிகள் கலந்து கொண்டனர்.


