மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், தூத்துக்குடி இணை ஆணையர் மண்டலம் சார்பாக திருவைகுண்டம் ஆய்வர் பிரிவிற்குட்பட்ட திருவைகுண்டம் அருள்மிகு நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைத்து, குலசேகரபட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் நிதியில் இருந்து புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த மாரிசெல்வன் – பொன்வள்ளி மற்றும் பேரூர் கிராமத்தை சேர்ந்த பேச்சிசெல்வம் – பேபி சரோஜினி ஆகிய இரு இணைகளுக்கு இன்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது…மேற்படி திருமண விழாவில் திருவைகுண்டம் ஆய்வர்,திருக்கோயில் பரம்பரை வழி சாரா அறங்காவலர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


