பா.ம.க. மாநில துணைத் தலைவர் AVA. கசாலி அவர்கள் வீட்டுக்கு பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் எல். முருகன் வருகை தந்தார். அவரை AVA.கசாலி குடும்பத்தினர் வரவேற்றனர். பின் அவரிடம் செய்துங்கநல்லூரைச் சேர்த்த வழக்கறிஞர் கோதர் மற்றும் தோணி அப்துல் காதர் ஆகியோர் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது : “பாரத பிரதமர் மோடி வடக்கே கங்கை நதியை சுத்தப்படுத்தியது போல இத்தாமிரபரணியை சுத்தப்படுத்த வேண்டும். தென்னாட்டு மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையும், ஐந்து மாநிலங்களுடைய குடிநீர் சேவையையும் தாமிரபரணி தான் பூர்த்தி செய்கிறது. மேலும் ஒரே தமிழ்நாட்டுக்குள் இரண்டு மாவட்டங்களுக்குள் ஓடக்கூடிய ஒரே நதி. வற்றாத ஜீவ நதி. இது நீளமான நதியும் அல்ல பெரிய நதியும் அல்ல. எனவே இதனை தூர் வருவது மிகவும் சுலபம். எனவே இந்த நதியை பாரத பிரதமர் தங்கள் மூலமாக தூர்வாரி சுத்தப்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் ” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட எல்.முருகன் ஆவணம் செய்வதாக வாக்களித்தார்.


