தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் தசரா விழாவை முன்னிட்டு இன்று இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கடந்த கடந்த 15ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று இரவு நடந்தது. தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் ஏறி சூரனை வதம் செய்ய புறப்பட்டார். கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், மகிஷாசூரன் உள்ளிட்ட சூரன்களை அம்மன் வதம் செய்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது,
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கோவில் அலங்கார குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பாலகுருசாமி வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மகாராஜன் மணிகண்டன் கோபால்,பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏசி செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல குழு உறுப்பினர் பிஎஸ்கே ஆறுமுகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்
இதேபோன்று தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


