தூத்துக்குடியில் 250 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புதிய சீருடைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள அண்ணா பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் டாக்டர் கலைஞர் ஆட்டோ ஸ்டாண்ட் -ஐ சார்ந்த சுமார் 250 ஓட்டுநர்களுக்கு நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புதிய சீருடைகள் வழங்கினார். விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


